ஜெயம் ரவியை இயக்கும் டைரக்கடர் அகமது

டைரக்டர் அகமது இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இப்படம் ராணுவத்தை மையப்படுத்தி உருவாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் அகமது ‘என்றென்றும் புன்னகை’, ‘வாமனன்’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

ஜெயம் ரவி ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும்  கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்


இதனிடையே ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் அடுத்தடுத்து 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!