ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுக்காக காத்திருக்கும் நித்யா

தமிழக முன்னாள் முதல்வரும், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப் போவதாக அடுத்தடுத்து சிலர் அறிவித்தனர்.

பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, பிரபல இயக்குனர்கள் லிங்குசாமி, விஜய் ஆகியோர் இயக்கத்தில் தனித் தனியாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளது. இதில் பிரியதர்ஷினி இயக்க உள்ள படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் மலையாள நடிகை நித்யா மேனன் நடிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள்.

அந்தப் படம் பற்றி நித்யா மேனன் கூறுகையில், “ஜெயலலிதா படத்தில் நடிப்பது மிகவும் கடினமானது. இப்படம் பற்றி படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி என்னைச் சந்தித்து கூறுகையில் அதிகமாக ஈர்க்கப்பட்டேன். அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். இப்படத்தை உருவாக்கினால் கதாபாத்திரத்திற்கு மிகவும் நேர்மையாக நடிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் சரியான பாதையில் மிகவும் நம்பிக்கையுடன் போய்க் கொண்டிருக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒரு நடிகையாக அக்கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியானது,” என்கிறார்.

Sharing is caring!