ஜோதிகாவின் காற்றின் மொழி

திருமணத்திற்குப் பிறகு பிரேக் விட்டிருந்த நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் திரையில் மறுபிரவேசம் செய்தார். பிறகு மகளீர் மட்டும் படத்தில் நடித்தார்.  இப்போது மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’, ராதா மோகனின் ‘காற்றின் மொழி’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

தன்னை முன்னிலைப் படுத்தும் படங்களில் மட்டும் நடித்து வரும் ஜோதிகா காற்றின் மொழி படத்தில் வானொலி தொகுப்பாளராக நடிக்கிறார் என்பது நமக்குத் தெரியும். இதில் அவருடன் விதார்த் மற்றும் தெலுங்கு நடிகை லக்‌ஷ்மி மஞ்சு முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்க, நடிகர் சிம்புவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இதன் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காற்றின் மொழி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. போஸ்டரில் ஜோதிகா தனது இரண்டு கைகளிலும் பதாகைகளை வைத்திருக்கிறார். அதில் பெண்களுக்கான பத்து கட்டளைகள் என பட்டியலிடப் பட்டிருக்கிறது. வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ‘இதுல நாங்க எப்போவோ பி.ஹெச்டி வாங்கிட்டோம், இப்போ வந்து எல்.கே.ஜி பிள்ளைங்களுக்கு மாதிரி லிஸ்ட் போட்டுருக்கீங்களே’ என்ற கமென்ட் தான் பெண்கள் மத்தியில் கிடைத்திருக்கிறது

Sharing is caring!