“டப்பிங், எடிட்டிங் இனி எல்லாம் அஜித் வீட்டில்தான்”

சென்னை:
இனி எல்லாம் வீட்டில்தான்… வீட்டில்தான். என்ன விஷயம் என்கிறீர்களா.

அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் பொங்கல் அன்று ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் வெளிவரவுள்ளதும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அஜித் தற்போது பலகோடி ரூபாய் புதிய பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி வருகிறாராம். இந்த வீட்டில் பிரிவியூ தியேட்டர், டப்பிங் தியேட்டர் மற்றும் எடிட்டிங் உட்பட போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் செய்வதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளதாம்.

இனிதான் நடிக்கும் படங்களின் டப்பிங் உள்பட அனைத்து பணிகளும் இனிமேல் இந்த வீட்டில்தான் நடக்குமாம். இதனால் ஷூட்டிங் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் அஜீத்துக்கு மிக நெருக்கமானவர்களின் படங்களுக்கும் இனிமேல் இங்குதான் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடக்குமாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!