டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீதான பாலியல் குற்றச்சாட்டு… பின்வாங்கிய சின்மயி

சென்னை:
டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது பெண் கூறிய பாலியல் குற்றச்சாட்டு பதிவை வெளியிட்ட சின்மயி தற்போது பின்வாங்கி உள்ளார்.

பாடகி சின்மயி கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. வைரமுத்து படுக்கைக்கு அழைத்தார் என கூறிய அவர், மற்ற பிரபலங்கள் மீதும் புகார்களை வெளியிட்டார்.

இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது இலங்கை பெண் புகார் கூறியதாக சின்மயி டுவிட் போட்டு இருந்தார். ஆனால் பின்னர் தான் தெரியவந்தது அது உண்மை அல்ல என்று.

தற்போது சின்மயி அப்படியே இந்த விஷயத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார். “அந்த பெண் வேண்டுமானால் மீடியாவிடம் செல்லட்டும். நான் இனி ஆதரிக்க மாட்டேன்” என கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!