டாப்ஸிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்… பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை:
தமிழில் அறிமுகமாகி இப்போ இந்தியில் வெற்றி நடிகையாக உலாவரும் டாப்ஸிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தகவல்கள் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

நடிகை டாப்ஸிக்கு அவரது நண்பருடன் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக ஒரு தகவல் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் டாப்ஸிக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வராவில்லை. இதனால் கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி.

இந்த ஆண்டும் தலா ஒரு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். டாப்ஸி தனது நண்பருடன் டேட்டிங் செய்வதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போ, மற்றொரு வீரர் தனிஷ் ஆகியோரிடம் நெருக்கமாக அவர் பழகி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார் டாப்ஸி. அங்கு மேதிஸும் வந்திருந்தார். எளிமையாக நடந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், ரகசியமாக நடந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கவே இவர்கள் கோவா சென்றதாக கூறப்படுகிறது.

தற்போது கையில் உள்ள படங்களை முடித்து கொடுத்தபிறகு டாப்ஸியின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!