டாஸ்க்கில் பிரச்னை… பொன்னம்பலத்தை திட்டி மஹத்

சென்னை:
என் காதலி பற்றி எந்த நாயும் பேசக்கூடாது என்று வரைமுறையின்றி பேசியுள்ளார் நடிகர் மஹத்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாகியுள்ளது.

மஹத் போல நடித்துக்கொண்டிருக்கும் பொன்னம்பலம் மஹத்தின் காதலி பெயரை சொல்லி வீட்டில் கத்தினார். மேலும் கேமரா முன்பு சென்று கூறினார். அதை பார்த்து கோபமான மஹத் “என் கேர்ள் பிரெண்ட் பத்தி எந்த நாயும் பேச வேண்டாம்!” என பொன்னம்பலத்தை பார்த்து கூறினார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த (நடுவர்) நடிகை ரித்விகா ”யாரும் தயவு செய்து காதலன், காதலி பட்டப்பெயர் பற்றி பேசவேண்டாம். கெட்ட வார்த்தை பேசவேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!