டிஆர்பி முக்கியமில்லை… கதைதான் முக்கியம்… ராதிகாவின் முடிவு

சென்னை:
டிஆர்பி ரேட்டிங் முக்கியமில்லை… கதையின் போக்குப்படியே இருக்கட்டும் என்று உறுதியாக உள்ளார் நடிகை ராதிகா.

டிஆர்பி விசயத்தில் மற்ற சானல்கள் கடும் போட்டியில் இருக்கிறார்கள். வியாழக்கிழமை வந்தால் போது அவர்களுக்கு டென்சன் தான். ரேட்டிங்க்ஸ் சற்று குறைந்தால் கதையை மாற்று என்ற நிலை தான்.

அந்த வகையில் ராதிகா இந்த டிஆர்பியை பற்றி பேசவே மாட்டாராம். எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்பதோடு சீரியல் கதை எழுதிய குமரேசன், ரத்னம் ராகவன் ஆகியோரின் விருப்பத்திற்கே விட்டுவிடுவாராம்.

இதை சொன்னால் மற்றவர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் இதுவே உண்மை. இதனால் தான் இந்த சீரியல் நல்ல சீரியல் என்ற பெயரோடு 6 வருடங்கள் கழித்து ஓடுகிறது என பெருமைப்படுகிறார்கள் இதன் எழுத்தாளர்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!