டிராப்பாகும் நிலையில் இந்தியன் 2! ஷங்கருக்கு உதவிய ஏ.ஆர்.ரகுமான்..

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்து இயக்கவுள்ள இந்தியன்2 படத்தினை லைகா நிறுவனம் தான் தயாரிக்கவிருந்தது. ஆனால் ஷூட்டிங் துவங்கிய சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

படம் டிராப் ஆகும் என கூறப்படும் நிலையில் ஷங்கர் அடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். அதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் உதவியுள்ளார். இந்தியன்2விற்கு அனிருத் தான் இசை என்றாலும் ரகுமான் பெருந்தன்மையுடன் ஷங்கருக்கு உதவியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஷங்கர் தன் கதை மற்றும் படத்தின் கதாபாத்திரம் மற்றும் முக்கிய காட்சிகள் பற்றி தனியாக ஒரு புத்தகம் போல தயாரித்து ரிலையன்ஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியன்2வை யார் தயாரிப்பார்கள் என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.

Sharing is caring!