டிராமா இதுவரை வராத கதை

பிரபல மலையாள இயக்குனரும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவருமான இயக்குனர் ரஞ்சித் தற்போது மோகன்லாலை வைத்து டிராமா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க லண்டனில் நடைபெற்று வருகிறது. குறுகியகால படமாக உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பை 45 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்

மோகன்லால் தனது போர்ஷனை முடித்துக்கொடுத்துவிட்டு பிக்பாஸ் நிகழ்சசியில் பங்கேற்பதற்காக கேரளா வந்துவிட்டார். இந்தப்படம் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்ட மோகன்லால், “இந்தப்படம் இதுவரை வந்த மலையாள படங்களில் எதிலும் சேராத கதை இது.. அதுமட்டுமல்ல இதுவரை நானும் ரஞ்சித்தும் இப்படி ஒரு கதையில் வேலை பார்த்ததில்லை.. வழக்கமான கமர்ஷியல் அமங்கல எதுவும் இதில் இருக்காது” என கூறியுள்ளார்.

Sharing is caring!