டிரோன்களை தயாரிக்கும் தக்ஷா என்றொரு குழு ஆலோசகர்

நடிகர் அஜீத்குமார் சினிமாவைப் போலவே பல துறைகளிலும் ஆர்வம் கொண்டவர். பைக், கார் ரேஸை தாண்டி போட்டோ எடுப்பதிலும் ஆர்வம் மிக்கவர். மேலும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை உருவாக்கி பறக்க விடுவதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் இணைந்து டிரோன்களை தயாரிக்க தக்ஷா என்றொரு குழு அமைத்தனர். அதற்கு அஜித், ஆலோசகராக இருந்தார். அவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் விண்ணில் பறந்து செல்லக்கூடிய ஒரு டிரோன்களை அந்த குழுவினர் தயாரித்தனர்.

அதையடுத்து 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் தக்ஷா குழுவினரும் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தக்ஷா குழுவினரின் டிரோன் 6 மணி நேரம் 7 நிமிடம் விண்ணில் பறந்து சாதனை படைத்திருக்கிறது. இது கின்னஸ் குழுவினருக்கு பரிந்துரைக்கப்பட இருக்கிறது.

இந்த விமானம் 10 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லும் ஆற்றல் கொண்டதாம். அதனால் மழைக்காலம் உள்ளிட்ட பேரிடர் பணிகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

Sharing is caring!