டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

நியூசிலாந்து:
டி – 20 போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய- நியுசிலாந்து அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. எஞ்சிய 2  போட்டிகளில் மற்றும் டி 20 தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் ஷர்மா சர்மா கேப்டனாக செயல்படவுள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் தொடருக்குப் பின் பிப். 6 முதல் 10-ம் தேதிவரை 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடக்கிறது. இந்த போட்டிக்கான நியுசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் இடம்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் பெர்குஷனுக்கு பதிலாக டிக்னரும், நீஷம்க்கு பதிலாக பிரேஸ்வெல்லும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆல்ரவுண்டர் டேர்ல் மிட்ஷெல் என்பவர் புதுமுக வீரர் அறிமுகமாகிறார். முதல் டி20 போட்டி வெல்லிங்டன் நகரில் பிப்ரவரி 6-ம் தேதியும், 2-வது போட்டி 8-ம் தேதி ஆக்லாந்திலும், 3-வது போட்டி 10-ம் தேதி ஹேமில்டனிலும் நடக்கிறது.

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), டக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஷன் (முதல் இரு போட்டிகளுக்கு மட்டும்), மார்டின் கப்தில், ஸ்காட் குக்கலேஜின், டேர்ல் மிட்ஷெல், காலின் மன்ரோ, மிட்ஷெல் சான்ட்னர், டிம் ஷீபர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், பிளையர் டிக்னர் (3-வது போட்டிக்கு மட்டும்).

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!