தங்கையுடன் டான்ஸ் ஆடும் படத்தை போஸ்ட் செய்த ஐஸ்வர்யா

சென்னை:
தங்கையுடன் டான்ஸ் ஆடும் படத்தை முதல் போஸ்ட்டாக போட்டு இன்ஸ்டாகிராமிற்கு வந்துள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அழகான இரு மகன்கள் இருக்கிறார்கள்.

3, வை ராஜா வை என படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென்னுக்கு டப்பிங்க் பேசியதோடு உன் மேல ஆசதான் பாடலையும் பாடினார். இவர் உலக பெண்கள் தினத்தில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பரத நாட்டியம் ஆடியது கடும் விமர்சனத்திற்குள்ளானது.

சமீபத்தில் அவரின் தங்கை சௌந்தர்யாவின் திருமணம் நடைபெற்றது. இருவரும் டான்ஸ் ஆடியது போல எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதல் போஸ்ட்டாக போட்டு இன்ஸ்டாகிராமில் புதிய பக்கத்தை தொடர்ந்துள்ளார். இதனை ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யா ராய் மாதுரி தீக்சித் டான்ஸ் போல இருக்கு. வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ என கமெண்ட் அடித்துள்ளார்.

ஓரிரு நாட்களிலேயே அவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்துள்ளனர். அதனை தனுஷும் வரவேற்றுள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!