தடை… வடிவேலுவின் புதிய படத்திற்கு விழுந்தது தடை

சென்னை:
வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பேய் மாமா படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன்-வடிவேலு கூட்டணியில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் துவங்கிய 10 நாட்களில் நின்றுபோனது. வடிவேலு இயக்குனருடன் சண்டை போட்டு கிளம்பியவர் திரும்ப ஷூட்டிங்கிற்கு வரவே இல்லை.

இதனால் படத்திற்காக போடப்பட்ட பலகோடி ருபாய் மதிப்புள்ள செட் வீணாகிப்போனது. தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த பிரச்சனை பற்றி ஷங்கர் புகார் அளித்த நிலையில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

இந்நிலையில் சில நாட்கள் முன்பு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்கிற படத்தில் நடிப்பதாக கூறி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது. அது பற்றி அறிந்து தயாரிப்பாளர் சங்க இயக்குனரை அழைத்து பேசி படத்திற்கு தடை விதித்துள்ளது. மேலும் வடிவேலுவை அணுகிய மற்ற இயக்குனர்களையும் அழைத்து பேசி தடை போட்டுள்ளனர்.

இதனால் இனி வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை முடிக்காமல் இனி வேறு படங்களில் நடிக்கவே முடியாது என்கிற சூழ்நிலை தான் உள்ளது. இந்நிலையில் ஷங்கர் மற்றும் வடிவேலு இடையே சமாதானம் பேச தற்போது சீமான் முயற்சித்து வருகிறாராம். விரைவில் 24ம் புலிகேசி படம் மீண்டும் துவங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அவர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!