தணிக்கை செய்யப்பட்ட “விஸ்வரூபம் 2” காட்சிகள் இவைதான்

கமல் ஹாசன் நடித்து இயக்கி நாளை வெளியாகும் விஸ்வரூபம் 2 படத்தில் தணிக்கை குழு 22 இடங்களை கத்தரித்ததாக தெரிய வந்துள்ளது.

கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2,  நாளை உலகெங்கும் வெளியாகிறது. 2010ம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஸ்வரூபம் படத்தின் இரண்டாவது பாகம் இதுவாகும். முதல் பாகம் வெளியாகும் போதே, படத்தை வெளியிட கூடாது என மாபெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், இரண்டாம் பாகத்தின் தணிக்கை சான்றிதழ் மீது அனைவரின் கவனமும் இருந்தது.

படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. தணிக்கைக்கு பிறகு படத்தின் நீளம் 2 மணிநேரம் 21 நிமிடங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. படத்தில் 22 இடங்களில் வரும் காட்சிகள் வெட்டப்பட்டோ அல்லது மாற்றம் செய்யப்பட்டோ உள்ளதாக தெரிய வந்துள்ளது. மொத்தம் மாற்றம் செய்யப்பட்ட 22 காட்சிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!