தனது அரசியல் பிரவேசத்தை உறதிப்படுத்தினார்

2017ம் டிசம்பர் 31-ந்தேதி அன்று தனது அரசியல் பிரவேசத்தை உறதிப்படுத்தினார் ரஜினி. அதையடுத்து ரஜினி ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தொடர்ந்து வருகிறார். மாவட்டந்தோறும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

ஆனபோதும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் ரஜினி, பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்தநிலையில், நேற்று திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார் நடிகர் தனுஷ். அப்போது, ரஜினி அரசியலில் பிரவேசிக்கும்போது நீங்கள் எந்த வகையில் ஆதரவு கொடுப்பீர்கள்? என்று அவரிடம் மீடியாக்கள் கேள்வி கேட்டனர். ஆனால் அதுகுறித்து தனுஷ் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக கடந்து சென்று விட்டார்.

முன்பெல்லாம் ரஜினி குறித்த கேள்விகளுக்கு ஆர்வமாக பதில் கொடுப்பார் தனுஷ். ஆனால் இப்போது அவர் பதில் சொல்லாமல் போனது மீடியாக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

Sharing is caring!