தனது படத்திற்கு தேவர் மகன் 2 தலைப்பு வைக்கப்படாது – கமல்

விஸ்வரூபம் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இதையடுத்து தேவர் மகன் 2 உருவாகும் என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் அறிவித்தார். இந்நிலையில், தனது படத்திற்கு தேவர் மகன் 2 தலைப்பு வைக்கப்படாது என கமல் கூறியுள்ளார்.

சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன். அவர் பேசுகையில், நான் சாதிக்கு எதிரானவன், எனது படங்களும் சாதிக்கு எதிராக தான் இருக்கும். எனது அடுத்தப்படத்திற்கு தேவர் மகன் 2 என்ற தலைப்பு வைக்கப்படாது, படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை என்றார்.

மேலும் பாலியல் தொடர்பான குற்றங்கள் எல்லா துறையிலும் இருக்கிறது. சினிமா துறையில் அதிகம் இருப்பது போன்று தோன்றுகிறது. குற்றம் சொன்ன உடனேயே ஒருவரை தாக்கிவிடக் கூடாது. இரண்டு தரப்பையும் ஆராய்ந்து நியாயத்தை கேட்க வேண்டும்.

எனது குரு காந்தி தான். அவர் கம்யூனிஸ்ட் என்றால் நானும் அப்படியே. மாணவர்களுக்கும், எனக்கும் இடையேயான உரையாடலை யாரும் தடுக்க முடியாது.

இவ்வாறு கமல் கூறினார்.

Sharing is caring!