தனது மகள் ஆராதனாவுடன் தானும் ரெமோ நர்ஸ் கெட்டப்பில் சிவகார்த்திகேயன்

2016ம் ஆண்டில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் ரெமோ. இந்த படத்தில் ரெஜினா மோத்வானி என்றொரு நர்ஸ் வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்தார். அனிருத் இசையமைத்தார்.

இந்த படம் வெளியாகி நேற்றோடு 2 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனை கொண்டாடும் வகையில், தனது மகள் ஆராதனாவுடன் தானும் ரெமோ நர்ஸ் கெட்டப்பில் இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த போட்டோவை சிவகார்த்திகேயனின ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

முதன்முதலாக தான் தயாரித்துள்ள கனா படத்தில் மகள் ஆராதனாவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் பாடியுள்ள வாயாடி பெத்த புள்ள… பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!