தனிஒருவன் 2 கதை வேலைகளில் மோகன்ராஜா

ஜெயம் ரவியின் கேரியர் மட்டுமின்றி அவரது அண்ணனான மோகன்ராஜாவின் கேரியரிலும் தனிஒருவன் படம் முக்கியத்துவம் வாய்ந்தது. ரீமேக் பட டைரக்டர் என்று அழைக்கப்பட்டு வந்த அவரது அந்த இமேஜை உடைத்த படமும் அது தான். இனிமேல் நான் ரீமேக் படமெடுக்க மாட்டேன். நானே கதைகள் ரெடி பண்ணி இயக்குவேன் என்று சொன்னார் மோகன்ராஜா.

அதையடுத்து, சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஜெயம் ரவியை வைத்து தனிஒருவன் 2 படத்தை இயக்குவதற்கான கதை வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அந்த படத்திலும் நயன்தாரா தான் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்க உள்ளார். இப்படம் அடுத்தாண்டு துவங்க உள்ளது.

Sharing is caring!