தனிமைப்படுத்திக்கொள்ளாத நடிகரால் மனைவிக்கு தொற்று

ஹொலிவுட் நடிகர் ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாததால், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

Thor மற்றும் The Avengers படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹொலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா (Idris Elba) தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே வைரஸ் தாக்கியதாகவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எல்பாவை தொடர்ந்து அவரது மனைவி சபரினாவிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 16 ஆம் திகதி இட்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் வீடியோ மூலம் தனது ரசிகர்களுக்கு அறிவிக்கும் போது, அவர் அருகில் மனைவி சப்ரினாவும் உடனிருந்தார்.

எல்பா கொரோனா பாதிப்பு காரணமாக ICU-வில் இருக்கிறார் என்ற வீடியோ வைரலாகவே, அது ஒரு பொய்யான தகவல், நான் நலமுடன் வீட்டில் தான் இருக்கிறேன் என எல்பா பதில் அளித்தார். மேலும், சிலர், உங்கள் மனைவியை ஏன் அருகில் வைத்துள்ளீர்கள், அவருக்கும் கொரோனா தொற்று பரவிவிடாதா? சுய தனிமையை ஏன் செய்துகொள்ளவில்லை என கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், எல்பா மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சப்ரினா, தனக்கு கொரோனா வைரஸ் தாக்கும் என்று அறிந்தே இருந்தேன். இருந்தாலும், கஷ்ட காலத்தில், கணவருக்கு பணிவிடை செய்யாமல் எப்படி விட்டு விலகி செல்வது என கூறியுள்ளார். இருவரையும் தனிமைப்படுத்தி வைத்து, தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Sharing is caring!