தனுசுக்கு அண்ணனாக நடிக்க உள்ளாராம் சசிக்குமார்

சென்னை:
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜுலை மாதத்தில் நடக்கிறது. இதில் தனுஷ் அண்ணனாக நடிகர் சசிக்குமார் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்காக ரசிகர்கள் வெயிட்டிங் உள்ளனர். ஆனால் படம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது.

இப்போது தனுஷ்-கௌதம் மேனன் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் தனுஷிற்கு அண்ணனாக நடிக்க சசிகுமார் கமிட்டாகி இருக்கிறாராம். நடுவில் சில பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் ஜுலை மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகுமார் நடித்திருக்கும் அசுரவதம் படம் வரும் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!