தனுஷிற்கு ஜோடி இவரா?

தனுஷ் தற்போது தன் இரண்டாவது படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார். இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கின்றது.

இதில் நாகர்ஜுனா, ஸ்ரீகாந்த், சரத்குமார், அதிதி ராவ் ஆகியோர் நடிக்க அவர்களுடன் தனுஷும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை அனு இமானுவெல் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இதற்கு முன் அனு இமானுவெல் துப்பறிவாளன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!