தனுஷுக்கு மீண்டும் கோர்ட் நோட்டீஸ்

மதுரை:
தனுஷ் கொடுத்த கல்வி சான்றிதழ் உட்பட ஆவணங்கள் பொய்யானவை என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் வயதாகிவிட்ட எங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் உண்மை இல்லை என கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கின் போது தனுஷ் தாக்கல் செய்த கல்வி சான்றிதழ் உட்பட தாக்கல் செய்த ஆவணங்கள் பொய்யானவை என கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து நடிகர் தனுஷ் மற்றும் புதூர் காவல் ஆய்வாளருக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!