தனுஷுடன் சாய்பல்லவி தங்கை நடிக்கிறார்

மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில்  தனுஷுடன் நடிகை சாய்பல்லவி நடித்தார். இந்த நிலையில் அவரின் தங்கை பூஜாவும் தனுஷ் படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு அவரின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் தனுஷுக்கு நாயகியாக நடித்தவர் சாய் பல்லவி. இந்நிலையில், சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனும் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவியது.

இதற்கு சாய் பல்லவியின் பெற்றோர்  மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, “இதில் உண்மையில்லை. தற்போதைக்கு அவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வதந்திக்கு தனுஷுடன் பூஜா கண்ணன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அப்புகைப்படம் தனுஷை சந்தித்த போது எடுத்துக் கொண்டது என்றும் குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘அடி பெண்ணே’ என்ற மியூசிக் வீடியோ ஒன்றில் நடித்துள்ளார் பூஜா கண்ணன்.

Sharing is caring!