தனுஷுன் அசுரன் படத்தின் கதை நில அபகரிப்பு பற்றியதா?

சென்னை:
தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் கதை நில அபகரிப்பு பற்றியது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் அடுத்து நடிக்கும் அசுரன் படத்தினை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். அதில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் கதை நில அபகரிப்பு பற்றியது என்று தற்போது தகவல் கசிந்துள்ளது. தன் அண்ணனை கொன்ற வில்லனை தனுஷ் எப்படி பழிவாங்குகிறார் என்பது தான் படத்தின் கதையாம்.

பூமணி எழுதிய வெக்கை என்கிற நாவலை தழுவி தான் இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் இசையமைக்கிறார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!