தனுஷ் இயக்கத்தில் சரித்திர கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா

‘ப பாண்டி’ படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்கி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, சரத்குமார், ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, அதிதி ராவ் ஹைதரி என பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். சரித்திர கால கதை அம்சம் கொண்ட இந்தப் படத்தில் 600 வருடங்களுக்கு முந்தைய ஒரு கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடிக்கிறாராம். இது பற்றிய தகவலை அவரே வெளியிட்டுள்ளார். இதுவரை நாகார்ஜுனா அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

மிகப் பிரம்மாண்டமான பொருள் செலவில் படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டு, அதற்கான பட்ஜெட்டை தனுஷ் குறைத்து, குறைந்த செலவில் நிறைவாகத் தர முடிவெடுத்துள்ளாராம். தன்னுடைய இயக்கத்தின் முதல் படமான ‘ப பாண்டி’ படத்தை குடும்பப் பாங்கான படமாகக் கொடுத்த தனுஷ் இந்தப் படத்தை ஒரு பேன்டஸி சரித்திரப் படமாகக் கொடுக்க ஒரு வருடமாக உழைத்து வந்தாராம். தமிழ்த் திரையுலகத்தில் இந்தப் படம் ஒரு முக்கியமான படமாக உருவாகும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sharing is caring!