தனுஷ் இயக்கி வரும் படம் டிராப்? கோலிவுட்டில் பரவும் செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!!

சென்னை:
தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் டிராப் ஆகி உள்ளதாக தகவல் பரவி வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் தனுஷ் தொடர்ந்து ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் அடுத்து ஒரு பீரியட் படத்தையும் இயக்குகிறார்.

இயக்குனராக அவரின் முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால்  இரண்டாவது படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. படத்தின் ஷூட்டிங் துவங்கி சில நாட்களும் நடந்தது. இதற்கிடையில் படத்தை தயாரிக்கும் தேனாண்டாள் நிறுவனம் நிதி நெருக்கடியில் இருப்பதால் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

படத்தை ட்ராப் செய்ய அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!