தனுஷ்- கார்த்திக் சுப்புராஜ் படம் தள்ளி போக என்ன காரணம்?

சென்னை:
தனுசை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருந்த படம் தள்ளி போக என்ன காரணம் என்று இப்போது தெரிய வந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த படம், நிறுத்தி வைத்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் அல் பசீனோ. காட்பாதர் படங்களின் பாகங்களில் நடித்து பிரபலமான இவர், ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் பல மாதங்களுக்கு முன்பு தொடங்க இருந்தது. சில காரணங்களால் இந்த படம் தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதில் முக்கிய வேடம் ஒன்றில் அல் பசீனோவை நடிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும் ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் இதனாலேயே படம் நிறுத்தி வைக்கப்பட்டதாக இப்போது கூறப்படுகிறது.

தனுஷ் அசுரன் படத்தில் நடித்தபடி நாகார்ஜுனா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார். அப்போது மீண்டும் அல் பசீனோவை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ள படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!