தனுஷ், யுவன் கூட்டணியின் முதல் ஒரு கோடி

தமிழ்த் திரையுலகத்தில் மறக்க முடியாத ஒரு கூட்டணியாக செல்வராகவன், தனுஷ், யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இருந்தது. செல்வராகவன், தனுஷ் ஆகியோரது ஆரம்ப காலப் படங்களான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களின் பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்தக் கூட்டணி கடந்த பத்து வருடங்களாக பிரிந்து போனது.

மீண்டும் யுவன்ஷங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி ‘மாரி 2’ படத்தின் மூலம் இணைந்தது ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பைப் பெற்றது. கடந்த வாரம் வெளியான ‘மாரி 2’ படத்தின் சிங்கிள் டிராக்கான ரௌடி பேபி பாடல் யுவன், தனுஷ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. யு டியூபில் அந்தப் பாடல் தற்போது ஒரு கோடி பார்வையைக் கடந்திருக்கிறது. இருவரது கூட்டணியின் முதல் ஒரு கோடி பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாரி 2’ படத்தின் ஒரு பாடல் வரவேற்பிற்காக தனுஷும், யுவனும் அதற்காக மாறி மாறி நன்றி தெரிவித்தும், பாராட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். ரௌடி பேபி பாடல் ஒரு கோடி பார்வையைக் கடந்த நிலையில் நேற்று வெளியான ‘மாரி 2’ டிரைலரும் 84 லட்சம் பார்வைகளைக் கடந்து ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Sharing is caring!