தனுஸின் அசுர வேட்டை…முக்கிய அறிவிப்பு

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘அசுரன்’ திரைப்படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘அசுர வேட்டை’ விரைவில் என அறிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ளதுடன் டீசர் உள்ளிட்ட புரமோஷன் திகதிகளையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் தனுஷ் சமீபத்தில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தனுஷ் 34’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சினேகா நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ‘அசுரன்’ படத்தின் படப்பிடிப்பு  நேற்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கியுள்ளதாகவும் இது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்றும் தனுஷ் அறிவித்துள்ளார்.

Sharing is caring!