தன்னை கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஆத்மிகா

சென்னை:
ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் அழகுதான். ஆண்களை அவர்களின் தோற்றத்தை வைத்து நாங்கள் மதிப்பிடுவதில்லை. உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று தன்னை கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை ஆத்மிகா.

மீசைய முறுக்கு படம் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. சினிமாவில் ஆண் நடிகர்கள் பெண் வேடமிட்ட கதாபாத்திரங்களின் முகங்களை வைத்து ஆத்மிகாவின் புகைப்படத்தையும் சேர்த்து கிண்டலாக `பெண்கள் தின வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டு ஒரு மீம் தயார் செய்துள்ளனர்.

இந்த மீமை தன் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு மீமை தயாரித்தவருக்கு ஒரு கடுமையான பதிவை ஆத்மிகா பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், இதுபோல் அசிங்கமான சிந்தனையோட உன்னைச் சிறு வயதிலிருந்து இப்படி வளர்க்கப்பட்டு இருக்கிறாயே என்று வருத்தப்படுகிறேன். கடவுள் எங்களைப் படைத்த விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் அழகுதான். ஆண்களை அவர்களின் தோற்றத்தை வைத்து நாங்கள் மதிப்பிடுவதில்லை. உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்’’ எனப் பதிவிட்டிருந்தார். ஆத்மிகாவுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!