தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி விட்டு ஏமாற்றியவர்களின் பட்டியல் வெளியிடுகிறார் – நடிகை ஸ்ரீரெட்டி

தமிழ் சினிமாவில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி விட்டு ஏமாற்றியவர்களின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது பட்டியலில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், லாரன்ஸ், சந்தீப் கிஷன், சுந்தர் சி… என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

மேலும் தான் வெளியிடும் பட்டியல்களை விட முன்னணியில் இருக்கும் பெரிய நடிகைகள் வாய் திறந்தால், அவர்களின் பட்டியலை கேட்டால் சேத்தே போய் விடுவீர்கள் என கூறியிருந்தார்.

ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ஸ்ரீரெட்டி மீது விமர்சனமும் வைக்கப்படுகிறது. விஷால், ஆர்கே செல்வமணி, கார்த்தி போன்றோர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என கூறி உள்ளனர். ஆனால் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது…. சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் இது உண்மை. என்னிடம் ஆதாரம் உள்ளது. போட்டோ, சேட்டிங் போன்றவைகளை ஆதாரமாக வைத்துள்ளேன். போலீசார் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினால் அந்த ஆதாரங்களை வெளியிட தயாராக உள்ளேன்.

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

கேமராவா வைக்க முடியும் : இதே ஸ்ரீரெட்டி, யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், எல்லா புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார்கள். நான் என்ன கேமராவை எனது மார்பிலோ அல்லது அந்த இடத்திலா வைக்க முடியும். இல்லை, சம்பந்தப்பட்டவர்கள் என்னுடன் செல்பி தான் எடுப்பார்களா…? உண்மை என்ன என்று கடவுளுக்கு தெரியும், அவர் சரியான தீர்ப்பை வழங்குவார் என கூறியுள்ளார்.

Sharing is caring!