தன்ஷிகா மீண்டும் அதே கதாபாத்திரத்தில்

ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் யோகி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தன்ஷிகா மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ரஜினி காந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் ‘யோகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தன்ஷிகா. ஒரு ஆணுக்கு இணையான கம்பீர தோற்றத்துடன் கையில் துப்பாக்கியுடன் ஒரு ”புரொபஷனல் கில்லர்” கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆக்‌ஷன் காட்சிகளில் கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.

ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் “யோகி டா” என்ற படத்தில் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார். கவுதம் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தின் திரைக்கதை, கதாநாயகியை மையப்படுத்தி காதல், ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கவுதம் கிருஷ்ணாவுடன், ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதுகின்றனர்.

தன்ஷிகா கதாநாயகியாக நடிக்க, வேதாளம், காஞ்சனா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வரும் கபீர் சிங் இதில் வில்லனாக நடிக்கிறார். சாயாஜி ஷிண்டே, மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ட்விட்டரில் டிரெண்டாகியுள்ள நிலையில், படத்தின் பூஜை டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெற்று, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

Sharing is caring!