தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்

மும்பை:
புகழ் பெற்ற பிரபலங்களை களங்கப்படுத்துவது இப்போது நாகரீகமாகி வருகிறது என்று தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய்.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவேற்றியிருப்பதாவது: ஹீரோ, பர்தேஸ் போன்ற பிரம்மாண்டமான படங்களை பாலிவுட் இயக்கிய சுபாஷ் கய், இளம் பெண் ஒருவரை ஓட்டல் அறையில் போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டினை சுபாஷ் கய் மறுத்துள்ளார். இதுகுறித்து சுபாஷ் கய் கூறியதாவது;

புகழ் பெற்ற பிரபலங்களை களங்கப்படுத்துவது இப்போது நாகரீகமாகி வருகிறது பெண்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!