தன் மீதான புகார்களுக்கு அதிரடி பதிலடி கொடுத்துள்ள விஷால்

சென்னை:
தன் மீதான முறைகேடு புகார்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சமீபகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர் சொன்னதை நிறைவேற்றவில்லை, தன்னிச்சையாக செயல்படுகிறார்.

கியூப் பிரச்சனை என பல காரணங்களை காட்டி அவர் மீது புகார் எழுந்து வருகிறது. இதற்கிடையில் அவர் சங்க பணத்தை முறைகேடு செய்துள்ளதாகவும், அதற்காக தான் இளையராஜாவுக்கான விழாவை நடத்துவதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிலர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். சாவியை அருகே இருந்த காவல் துறையில் ஒப்படைத்த சம்பவமும் நடந்தது. இந்நிலையில் தன் மீதான புகார்களுக்கு விஷால் பதில் அளித்துள்ளதாவது:

என் மீது புகார் கூறுபவர்களுக்கு இளையராஜாவுக்கு எடுக்கும் விழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எண்ணம். முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. கணக்குகள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும், விழா திட்டமிட்டபடி நடக்கும். இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!