தமன்னாவை திருமணம் செய்ய விரும்பும் ஸ்ருதி

நடிகை தமன்னா ஆணாக இருந்திருந்தால் இந்நேரம் அவரை நான் திருமணம் செய்திருப்பேன் என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகைகள் தமன்னா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் நெருங்கிய தோழிகள். இருவரும் ஒன்றாகத்தான் பல பார்ட்டிகளில் மற்றும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘தமன்னா என்னுடைய நெருங்கிய தோழி. அவருடைய நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள். அவர் ஒரு நல்ல பெண்.

இந்த பிறவியில் அவர் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் அவருடன் நான் டேட்டிங் சென்றிருப்பேன். மேலும் அவரையே என்னுடைய வாழ்க்கை துணைவராகத் தேர்ந்தெடுத்திருப்பேன்’ என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

நடிகை சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்லேல் கார்சல் காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!