தமன்னா கெட்ட ஆட்டம்

பாலகிருஷ்ணாவின் ‘என்டிஆர் கதாநாயகடு’, ராம் சரணின் ‘வினய விதேய ராமா’, ரஜினிகாந்தின் ‘பேட்ட’ ஆகிய போட்டிகளைக் கடந்து தெலுங்குத் திரையுலகில் பொங்கலுக்கு வெளிவந்த ‘எப் 2- பன் அன்ட் ப்ரஸ்ட்ரேஷன்’ படம் பெரிய வெற்றியைப் பெற்று, லாபத்தையும் கொடுத்துவிட்டது.

மக்கள் எதிர்பார்ப்பது இது மாதிரியான ஜாலியான, கலகலப்பான படத்தைத்தான் என்பதை ‘எப் 2’ வெற்றி நிரூபித்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் படத்தில் உள்ள பல அம்சங்களைக் காரணங்களாகச் சொல்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று தமன்னாவின் கிளாமர். இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘கிர்ரா..கிர்ரா..’ என்ற ஒரு பாடலில் தமன்னா கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்.

லுங்கி மற்றும் புடவை அணிந்து அவர் ஆடியிருக்கும் அந்த கிளாமரான ஆட்டத்திற்கு ஆந்திராவும் தெலுங்கானாவும் ஆரவாரம் செய்து வருகிறதாம். ரசிகர்கள் அந்தப் பாடலின் வீடியோவை யு டியூபில் வெளியிடக் கேட்க, அவர்களின் தற்போதைய திருப்திக்குப் படத்தின் தயாரிப்பாளர் வெறும் டிரைலரை மட்டும் ரிலீஸ் செய்திருக்கிறார்.

இந்த ‘எப் 2’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி என சீக்கிரமே செய்தி வரலாம்.

Sharing is caring!