தமிழக்கு வருகிறார் அன்னா ராஜன்

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் அங்கு ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டால் அடுத்து அவர்கள் கவனம் திரும்புவது தமிழ் படங்களின் பக்கம்தான். தாங்கள் நடிக்கும் படங்களின் ஸ்டில்ஸ்களை இணைய தளத்தில் வெளியிட்டும், மானேஜர்கள் மூலம் கொடுத்தனுப்பியும் வாய்ப்பு தேடிக் கொள்கிறார்கள்.

அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அன்னா ராஜன். மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் நாயகி. அதன் பிறகு வெளிபண்டித புத்தகம், சச்சின் படங்களில் நடித்தவர் இப்போது தமிழில் நடிக்கிறார்.

பாலாவின் உதவியாளர் அறிவுநிதி இயக்கும் படத்தில் விதார்த் ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கு இன்றும் டைட்டில் வைக்கவில்லை. இதில் விதார்த் 11 வயது சிறுவனுக்கு அப்பாவாக நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் நடந்து முடிந்துள்ளது.

Sharing is caring!