தமிழரசன் திரைப்படத்தில் இணையும் பிரபலம்

விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் திரைப்படத்தில்  நடிகை “சங்கீதா” இணைந்துள்ளார்.  இவர் பிதாமகன், தனம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.  இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நெருப்புடா.  இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் படங்களில் நடிக்கவில்லை.


இந்நிலையில் பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தில்  சங்கீதா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஏற்கனவே ரம்யா நம்பிஷன், ராதா ரவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம்  இசைஞானி இளையராஜா இசையுடன் உருவாகி வருகிறது.

Sharing is caring!