தமிழுக்கு இன்னுமொரு மலையாள நடிகை

சுனைனா மீண்டும் இணைந்து நடிக்கும் ‘எரியும் கண்ணாடி’ படம் மூலமாக தமிழுக்கு இன்னுமொரு மலையாள நடிகை வருகிறார். அவரது பெயர் அபர்ணா கோபிநாத். ஏற்கனவே அபர்ணா பாலமுரளி, அபர்ணா வினோத் என சில அபர்ணாக்கள் தமிழுக்கு வந்திருந்தாலும் இந்த அபர்ணா மட்டும் ரசிகர்களிடம் தனித்து தெரிவார் என உறுதியாக சொல்லலாம்.

காரணம் மலையாள சினிமாவில் இவர் மட்டும், தான் நடிக்கும் படங்களில் தனது கெட்டப்பை பற்றி கவலைப்படாமல் பாப்கட்டிங் தலையுடன் ஒரு ஆண் போலவே மிடுக்குடன் நடித்திருப்பார்.. அதேசமயம் ரசிகர்களிடம் கைதட்டலும் வாங்குபவர்.

துல்கருடன் நடித்த ‘ஏபிசிடி’, ‘சார்லி’, மம்முட்டியுடன் நடித்த ‘முன்னறியிப்பு’ ஆகியவற்றில் மிகச்சிறந்த நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார். மலையாள சினிமாவின் வித்தியாசமான ஹீரோயின் என்று தான் அபர்ணா கோபிநாத்தை சொல்வார்கள்.

Sharing is caring!