தமிழ்ப்படம் 2 சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம் தமிழ்படம் 2. இந்த படம் நாளை வெளியாகிறது. இதே கூட்டணியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தமிழ்ப்படம், சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

இந்த நிலையில், தற்போது தமிழ்ப்படம்-2 படத்திலும் முதல்பாகத்தைப் போலவே பிரபலங்களை கலாய்த்திருப்பதாகவே தெரிகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் வெளிநாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என அதிகப்படியான ரசிகர்கள் கொண்ட நடிகர்களின் படங்களைத்தான் அதிகாலை சிறப்பு காட்சிகள் போடுவார்கள். ஆனால் இந்த படத்திற்கும் நாளை காலை சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதாம். சென்னையில் சில தியேட்டர்கள் காலை 5 மணிக்கு படத்தை திரையிட உள்ளனர்.

Sharing is caring!