தமிழ் சினிமாவில் இந்த வாரம் அடுத்தடுத்து மூன்று பேர் இறந்து போய் உள்ளனர்

தமிழ் சினிமாவில் இந்த வாரம் அடுத்தடுத்து மூன்று பேர் இறந்து போய் உள்ளனர். நடிகர்கள் ராக்கெட் ராமநாதன், வெள்ளை சுப்பையா ஆகியோர் காலமான நிலையில், தயாரிப்பாளர் எம்.ஜி.சேகர் என்பவர் இன்று(செப்., 7) காலமானார்.

எம்ஜி பிக்சர்ஸ் சார்பில், “வசந்த மலர்கள், சீமான், கிளி பேச்சு கேட்கவா, தாய்மாமன், திருமூர்த்தி, சிவசக்தி மற்றும் பூச்சுடவா” போன்ற படங்களை தயாரித்துள்ளார் எம்ஜி சேகர். உடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

சேகரின் உடல் அஞ்சலிக்காக பெரம்பூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. (செப்., 8) இறுதிச்சடங்கு நடக்கிறது.

Sharing is caring!