தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு மதிப்பில்லை

ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலான வேடங்களில் நடிப்பவர் மட்டும் அல்ல, துணிச்சலாக பேசுபவரும் கூட.

அவர் தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு மதிப்பில்லை என நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

மாற்றுமொழி நாயகிகள் தான் தமிழில் அதிகம் நடிப்பதாகவும் தமிழ் நாயகிகளுக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியில் இந்திப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்தில் கேரளப் பொண்ணுங்க நடிக்கிறாங்க. ஆனால், தமிழில் மட்டும் தான் தமிழ் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை. ரெஜினா, சமந்தா இரண்டு பேரும் நல்லா தமிழ் பேசுவாங்க. ஆனால், ஆரம்பத்தில் அவர்களுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கலை. தெலுங்கில் மாஸ் ஹீரோயினா ஆனதிற்கு பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரித்து அவர்களை வரவேற்றது. தன்ஷிகா நல்லா தமிழ் பேசுற ஹீரோயின். ஆனால், அவருக்குப் படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் எல்லோரும் தமிழ் பேசுறவங்களா இருந்தும், பெரிய படங்களில் நடிக்கவில்லை. மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் திருச்சிப் பொண்ணு. மிஸ் இந்தியா பட்டம் வாங்கின பிறகு தான் அனு கீர்த்தி யார் என்று நமக்குத் தெரிய வந்தது. இந்த மாதிரி அனு கீர்த்திகள் நிறைய பேர் இங்க இருக்காங்க. நாம் தான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்

என ஐஸ்வர்யா ராஜேஷ் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!