தமிழ் சினிமாவுக்கு சேக்ஸ்பியர் நாடகம்

சேக்ஸ்பியர் நாடகம் தமிழ் சினிமாவுக்கு புதில்லை. நடிகர் திலகம் சிவாஜி சேக்ஸ்பியர் நாடகத்தை திரைப்படங்களில் நடித்துள்ளார். ரோமியோ ஜூலியட் நாடகத்தை ரஜினி, கமல், தனித்தனி சினிமாவில் இடம்பெற்ற நாடகத்தில் நடித்துள்ளனர். தற்போது ஜேக்ஸ்பியர் எழுதிய மெகபத் என்ற நாடகம் தமிழில் பகைவனுக்கு அருள்வாய் என்ற தலைப்பில் திரைப்படமாக தயாராகிறது.

ஜெய், நஸ்ரியா நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். கன்னட லூசியாவில் நடித்த சதீஸ் நாஸம், தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஏஞ்சலினா படத்தில் நடித்து வரும் சரண் சஞ்சய் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ஹீரோயின்கள் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் அனீஸ் கூறியதாவது:

ஷேக்ஸ்பியர் மெகபத் நாடகத்தை கடந்த 2 வருடமாக ஆய்வு செய்து தமிழுக்கு ஏற்ற வகையில் அதில் பல மாற்றங்கள் செய்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய படமாக இது இருக்கும். படத்தின் டைட்டில் லோகோவை வருகிற 8ம் தேதி ஸ்விட்சர்லாந்தில் , ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி நடத்தும் தங்க தமிழ் குரல் ரியாலிட்டி ஷோவில் வெளியிடுகிறோம் .

120 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியைய் ஒன்பது வயது சிறுமியான அனன்யா ராஜேந்திரகுமரே தொகுத்து வழங்குகிறார் . உலக தமிழர்களால் கவனிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் படத்தின் டைட்டில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இதில் நானும், இசை அமைப்பாளர் ஜிப்ரான், நடிகர் சரண் சஞ்சய் மூவரும் கலந்து கொள்கிறோம் . இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பதிவாகும். என்றார் இயக்குனர் அனீஸ்.

Sharing is caring!