தமிழ் சினிமா உலகில் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த குழு

மீடூ பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் முதலில் பாலிவுட்டில் தான் பூதாகரகமாக வெடித்தது. அதையடுத்து தற்போது கோலிவுட்டில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ் சினிமா உலகில் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக குழு அமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரையில் உள்ள பெண்களை பாதுகாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நடிகை டாப்சியுடன் ரேணுகா சகானே, அமோல் குப்தா ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இதையடுத்து டாப்சி விடுத்துள்ள செய்தியில், இந்த சினிமா தொழில் நமக்கு ரொட்டியும், வெண்ணெய்யும் தருகிறது. இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அதனால் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இடத்தை சுத்தப்படுத்துவோம். இந்த குழுவின் மூலம் நடிகைகளுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் ரீதியான சிக்கல்களில் இருந்து அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Sharing is caring!