தமிழ் படம் 2 செம வசூல் வேட்டை… படக்குழு மகிழ்ச்சி

சென்னை:
செம வசூல் வேட்டை நடத்தி உள்ளது தமிழ்படம் 2 என்று கோலிவுட்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்த தமிழ்ப்படம் 2 படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த படங்களையும் கலாய்த்து வந்த இந்த படத்திற்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் அதற்கு பதிலாக வரவேற்பு தான் கிடைத்துள்ளது.

கடந்த 12ம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை சென்னையில் ரூ. 3.97 கோடி வசூலித்துள்ளது. படத்தை பார்க்க வரும் ரசிகர்களின் கூட்டம் அதிகம் வருவதால் வரும் காலங்களில் வசூலுக்கு எந்த குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!