தமிழ் பதிப்பையும் அதிக இடங்களில் திரையிட ஏற்பாடு

20 ஆண்டுகளுக்கு பிறகு மம்முட்டி தெலுங்கில் மீண்டும் நடித்துள்ள படம் ‘யாத்ரா’. மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறாக அல்லாமல், 2௦௦3ல் ஆந்திராவையே அதிரவைக்கும் விதமாக அவர் நடத்திய பாதயாத்திரையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கும் இந்தப்படத்தை மஹி ராகவ் என்கிற தெலுங்கு இயக்குனர் இயக்கியுள்ளார். வரும் டிச-21ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை மம்முட்டியின் நண்பரான ஆன்டோ ஜோசப் கைப்பற்றியுள்ளார். அதிக தியேட்டர்களில் இந்தப்படத்தை திரையிடுவதுடன், கேரளாவில் இதன் தமிழ் பதிப்பையும் அதிக இடங்களில் திரையிட ஏற்பாடு செய்து வருகிறாராம்.

Sharing is caring!