தமிழ் பேசும் நடிகைகள் கோலிவுட்டுக்கு தேவை… சொல்வது நடிகர் அதர்வா

சென்னை:
தமிழ் பேசும் நடிகைகள் கோலிவுட்டுக்கு தேவை என்று நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் பூமராங் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதர்வா, தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை என்றார்.

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 8ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் அதர்வா பேசும் போது, பூமராங் என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அது தான் நமக்கு திரும்ப வரும். இந்த படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது. ரதன் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் தமிழில் நிறைய படங்கள் இசையமைக்க வேண்டும். தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை. நல்ல கருத்தை தாங்கி இந்த பூமராங் வந்திருக்கிறது என்றார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!