தம்பி கார்த்திக்கு டிப்ஸ் கொடுத்த சூர்யா

பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படம் ஜூலை 13-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரித்துள்ளார்.

அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடித்தது குறித்து கார்த்தி கூறுகையில், இந்த படத்திற்கு தேவையான செலவுகளை சிக்கனம் இன்றி தாராளமாக செய்தார் சூர்யா. அதனால் படம் சிறப்பாக வந்துள்ளது. அதோடு, படப்பிடிப்பு நடைபெற்றபோது அவ்வப்போது விசிட் அடித்த அவர், டப்பிங் நடந்தபோது நான் நடித்த காட்சிகளை முழுவதுமாக பார்த்தார்.

அதோடு, என் அருகே அமர்ந்து கொண்டு சில டயலாக்குகளை எந்த மாதிரி பேசினால் நன்றாக இருக்கும் என்று எனக்கு டிப்ஸ் கொடுத்தார். அவர் சொன்ன திருத்தங்களை ஏற்றுக்கொண்டு இந்த படத்தில் பல காட்சிகளில் டப்பிங் பேசினேன் என்கிறார் கார்த்தி.

Sharing is caring!