தயாரிப்பாளர்கள் சம்பளம் தராததால் தான் தயாரிப்பாளராகினேன்

நடிகர் விஷ்ணு விஷால் மற்ற தயாரிப்பாளர்கள் சம்பளம் தராததால் தான் தயாரிப்பாளராக மாறியதாகக் கூறியுள்ளார்.

ராட்சசன் படத்திற்காக ரஜினியே பாராட்டியதில் உற்சாகமாக இருக்கிறார் விஷ்ணு விஷால். அவர் தயாரிப்பாளராக மாறியதன் பின்னணி பற்றி கேட்டதற்கு,

சில படங்களில் எனக்கு பாதிச் சம்பளம் கூட கைக்கு வரவில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் ஓடிக்கொண்டு இருந்தேன். சில தயாரிப்பாளர்கள் நான் ஓடுறதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். கமர்ஷியல் படம்னு நீங்க இறங்கினா… காணாமல் போயிடுவீங்க’ என்று சம்பளம் தராத ஒரு தயாரிப்பாளர் சொன்னார்.

யோசித்தால், அவர் சொல்வது சரிதான். அதை மாற்றத்தான், `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் நடித்தேன். அதற்கு வேற ஒருவர் தான் தயாரிப்பாளர், சில பிரச்சினைகளால் நானே தயாரிக்க வேண்டியதாகிப் போய்விட்டது. `கதாநாயகன்’ படத்திற்கும் அதே நிலைமை தான். இப்படி சினிமாவில் தொடர்ந்து எதையாவது கற்றுக்கொண்டே இருக்கிறேன். எனக்கு தயாரிப்பாளர் ஆகணும் எனும் ஆசை கிடையாது, சூழ்நிலை ஆக்கிடிச்சு

என்று கூறியுள்ளார்.

Sharing is caring!